அரிமா அரிமா! எந்திரன் பாடல்
பல்லவி
--------------
எந்திரன்: அரிமா அரிமா-நானோ
ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்- யம்மா
சும்மா விடுமா?
ராஜாத்தி என் நெஞ்சில் ஆசைத்தீ
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!
உன்-
பச்சைத்தேனை ஊற்று
என்-
இச்சை தீயை ஆற்று
என் செல்லச் சிலையே பந்தி நடத்து
சேலை இலை போட்டு
சரணம்-1
----------------
எந்திரன்: உயிரைப் பிதுக்கி
உதட்டில் ஒதுக்கி
உண்ணத்தான் உள்ளம் பொங்கிற்றே!
ஐஸ்வர்யா: ராட்சசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
என்றேதான் உள்ளம் எண்ணிற்றே!
எந்திரன்: நான் மனிதன் அல்ல
அஃறிணையின் தெய்வம் நான்;
காமுற்ற கடவுள் நான்;
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான் !
சரணம்-2
---------------
ஐஸ் : இருதுண்டு வானங்கள்
என் கண்கள் தானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே!
எந்திரன் :மொழி பேசும் வார்த்தைக்கு
முத்தத்தில் இடமில்லை
வார்த்தைகளால் வாழ்வைக் கொல்லாதே!
ஐஸ் : ஏ ஏழாம் அறிவே!
உள்மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்-நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நான் என்றாய்!
குழு
-------
இவன்
பேரைச் சொன்னதும், பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைதட்டும்
இவன்
உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவும் நிலவும் தலைதட்டும்
அடி அழகே உலகே!
உன் அங்கம் எங்கும்
இவன் தங்கும் சிங்கம்
இவன்
உன்னை தொட்டால் போதும்
பூமி வலஇடமாய்ச் சுற்றப் பார்க்கும்
இவன்
உன்னை முத்தம் இட்டால்
மொத்த வானமும் சிவந்தே போகும்.
--------------
எந்திரன்: அரிமா அரிமா-நானோ
ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்- யம்மா
சும்மா விடுமா?
ராஜாத்தி என் நெஞ்சில் ஆசைத்தீ
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!
உன்-
பச்சைத்தேனை ஊற்று
என்-
இச்சை தீயை ஆற்று
என் செல்லச் சிலையே பந்தி நடத்து
சேலை இலை போட்டு
சரணம்-1
----------------
எந்திரன்: உயிரைப் பிதுக்கி
உதட்டில் ஒதுக்கி
உண்ணத்தான் உள்ளம் பொங்கிற்றே!
ஐஸ்வர்யா: ராட்சசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
என்றேதான் உள்ளம் எண்ணிற்றே!
எந்திரன்: நான் மனிதன் அல்ல
அஃறிணையின் தெய்வம் நான்;
காமுற்ற கடவுள் நான்;
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான் !
சரணம்-2
---------------
ஐஸ் : இருதுண்டு வானங்கள்
என் கண்கள் தானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே!
எந்திரன் :மொழி பேசும் வார்த்தைக்கு
முத்தத்தில் இடமில்லை
வார்த்தைகளால் வாழ்வைக் கொல்லாதே!
ஐஸ் : ஏ ஏழாம் அறிவே!
உள்மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்-நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நான் என்றாய்!
குழு
-------
இவன்
பேரைச் சொன்னதும், பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைதட்டும்
இவன்
உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவும் நிலவும் தலைதட்டும்
அடி அழகே உலகே!
உன் அங்கம் எங்கும்
இவன் தங்கும் சிங்கம்
இவன்
உன்னை தொட்டால் போதும்
பூமி வலஇடமாய்ச் சுற்றப் பார்க்கும்
இவன்
உன்னை முத்தம் இட்டால்
மொத்த வானமும் சிவந்தே போகும்.

0 comments:
Post a Comment